திருப்பதி திருப்பதி கோவிலில் 8 நாட்களில் 5.76 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததுடன், ரூ.28.94 கோடி காணிக்கை வசூல் செய்யப்பட்டு உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா, கடந்த 15-ந்தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்றது. தினமும் காலை மற்றும் இரவில் வாகன சேவை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மலையப்ப சுவாமி எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்வான கருட சேவை 5-வது நாளில் நடைபெற்றது. இந்நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பகவானை வழிபட்டனர். ரூ.28.94 கோடி காணிக்கை விழாவின் 6-ம் நாளில் அனுமந்த வாகன சேவை, தங்கத்தேரோட்டம் மற்றும் கஜ வாகன சேவை நடைபெற்றது. ஏழாம் நாள் சூரிய பிரபை மற்றும் சந்திர பிரபை வாகன சேவை நடைபெற்றது. 8-ம் நாளான நேற்று காலை ரதோற்சவம் (பெரிய தேரோட்டம்), அஸ்வ வாகன சேவை (குதிரை வாகனம்) நடைபெற்றது. பிரம்மோற்சவத்தின் நிறைவு நிகழ்வான சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 8 நாட்களாக நடந்த வருடாந்திர பிரம்மோற்சவத்தில் ரூ.28.94 கோடியை காணிக்கையாக செலுத்தி, சுமார் 5.76 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த நிகழ்வின்போது மட்டும் 33 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/in-8-days-5-76-lakh-devotees-visit-tirupati-temple




