ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம், பிரபல பாலிவுட் நடிகை ராணி முகர்ஜிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. பாலிவுட்டின் சினிமாவில் முன்னணி நடிகையாக, ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ராணி முகர்ஜி. 1978ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி, மும்பையில் பிறந்தவர் ராணி முகர்ஜி. இவரது தந்தை ராம் முகர்ஜி, இயக்குநராக இருந்தவர், தாய் கிருஷ்ணா முகர்ஜி, பின்னணி பாடகியாக இருந்தவர். சினிமா குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதால் இவருக்கும் சினிமா மீது அதிக ஆர்வம். 1997ம் ஆண்டு, ‘ராஜா கி ஆயாகி பாராத்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ராணி முகர்ஜி, தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ராணி முகர்ஜி. இவர் பிளாக், நோ ஒன் கில்டு ஜெசிகா, ஹிட்ச்கி உள்ளிட்ட பெண்களை முதன்மையாகக் கொண்ட படங்களில் நடித்தன் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார். கடந்த 2014ம் ஆண்டு தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவை திருமணம் செய்து கொண்டார். தேசிய விருதை பெற்ற ராணி முகர்ஜி நடிகர் கமல்ஹாசன் இயக்கி நாயகனாக நடித்து வெளியான ‘ஹே ராம்’ படத்திலும் ராணி முகர்ஜி நாயகியாக நடித்திருந்தார். ஏராளமான பிலிம் பேர் விருதுகளையும் அவர் வென்றுள்ளார். 71-வது தேசிய விருது விழாவில் நடிகை ராணி முகர்ஜி தன்னுடைய முதல் தேசிய விருதை பெற்றார். சிறந்த நடிகைக்கான விருது ராணி முகர்ஜிக்கு ‘மிர்சஸ் சாட்டர்ஜி வெர்சஸ் நார்வே’ படத்துக்காக வழங்கப்பட்டது. கவுரவ டாக்டர் பட்டம் இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மெல்போர்ன் இந்தியத் திரைப்பட விழாவில் நடிகை ராணி முகர்ஜிக்கு அந்நாட்டின் லா ட்ரோப் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இந்தியத் திரைத்துறை, மனிதாபிமான உதவிகள் மற்றும் சமூக நலனுக்கானப் பணிகள் உள்ளிட்டவற்றில் அவரின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/actress-rani-mukerji-awarded-honorary-doctorate-in-australia




