சென்னை, சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த 7 மாணவர்கள் நேற்று கார் மூலம் புதுச்சேரி சென்றனர். அதன் பின்னர் மீண்டும் சென்னை நோக்கி வந்துகொண்டு இருந்தனர். செங்கல்பட்டு அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தரிகெட்டு ஓடி தூக்கி வீசப்பட்டது. இந்த விபத்தில் 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 4 மாணவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-near-chengalpattu-caused-by-a-burst-car-tyre-3-college-students-killed




