தூத்துக்குடி, தூத்துக்குடியில் 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 2 வாலிபர்களை கைது செய்தனர். போலீசார் ரோந்து பணி தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெப்பக்குளம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி வந்த 2 பேரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 1.2 கிலோ கஞ்சா பறிமுதல், 2 பேர் கைது இதையடுத்து மத்தியபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சட்ட விரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தூத்துக்குடி, நேதாஜி நகரைச் சேர்ந்தவர்களான சொர்ணபாண்டி மகன் சோலைக்குமார் (வயது 32) மற்றும் ராஜசிங் மகன் ஜெர்ரிஸ்(33) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/12-kg-of-ganja-seized-in-thoothukudi-2-arrested




