விந்தோக், நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 335 ரன்கள் குவித்துள்ளது. நமீபியா - தென் ஆப்பிரிக்கா தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றிபெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி விந்தோக் நகரில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நமீபியா முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. தென் ஆப்பிரிக்கா 335-9 இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 335 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் கானர் அதிகபட்சமாக 119 ரன்கள் குவித்தார். நமீபியா தரப்பில் அந்த அணியின் ஜாக் பிரெசல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 336 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி நமீபியா களமிறங்கி விளையாட உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/second-odi-south-africa-set-himalayan-target-for-namibia




