திருச்சி, பள்ளி கட்டிடத்தில் வைத்து 16 வயது சிறுமி 4 சிறுவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையஎல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெற்றோர் இல்லாத 16 வயது சிறுமி உள்ளார். இவர் சற்று மனநிலை சரியில்லாதவர். அந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த நான்கு சிறுவர்கள் அருகில் கட்டப்பட்டு வரும் பள்ளி கட்டிடத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அந்த சிறுமியை வைத்து 4 சிறுவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திள்ளனர். கதறி அழுத சிறுமி இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி அருகில் உள்ள பொதுமக்களிடம் கூறி கதறி அழுதுள்ளார் இதனைக் கேட்டு அதிர்ச்சடைந்த அப் பகுதி பொதுமக்கள் இந்த சம்பவம் தொடர்பாசுகோட்டை காவல் அனைத்து நிலையத்தில் புகார்கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அந்த 4 சிறுவர்களையும் அழைத்து சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அந்த 4 சிறுவர்களும் சேர்ந்து 16வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப் புக்கொண்டனர். இதையடுத்து போலீசார் அந்த 4 சிறுவர்கள் மீது போக்சோசட்டப்பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 4 சிறுவர்கள் கைது நான்கு சிறுவர்களையும் கைது செய்து தஞ்சை கூர் நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.கைது செய்யப்பட்ட நாலு சிறுவர்களும் 10,9 ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பது குறிப்பிடதக்கது. சமீப காலமாக அந்தப் பகுதியில் சிறுவர்கள் போதை மாத்திரை கஞ்சா உள்ளிட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது சட்டப்படியான கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/16-year-old-girl-raped-in-school-building




