நெல்லை, திருநெல்வேலிக்கு பெருமை சேர்த்த இளம் கிரிக்கெட் வீரர் பிஜுமுகேஷனுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- தமிழகத்திற்கு பெருமை திருநெல்வேலி முத்தமிழ் பப்ளிக் பள்ளியில் (சிபிஎஸ்இ) பயிலும் மாணவர் பிஜுமுகேஷன் அவர்கள், 14 வயதிற்குட்பட்ட சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான நான்கு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டிருப்பது, திருநெல்வேலி மாவட்டத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் மகிழ்ச்சியான செய்தியாகும். பாராட்டு இளம் வயதிலேயே தனது திறமையையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தி, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ள மாணவர் பிஜுமுகேஷன் அவர்களை இன்று எனது திருநெல்வேலி இல்லத்திற்கு நேரில் அழைத்து, எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டேன். அவரது விளையாட்டுத் திறமை மேலும் சிறந்து, எதிர்காலத்தில் பல்வேறு உயரங்களைத் தொட்டு, திருநெல்வேலிக்கும், தமிழகத்திற்கும், நம் பாரத தேசத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன். இந்த நிகழ்வில் திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசம் அவர்கள் உடன் இருந்தார். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/nainar-nagendran-congratulates-young-cricketer-biju-mukesh-who-has-brought-pride-to-tirunelveli




