புதுடெல்லி, இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சரன்ஷ் ஜெயினும், ரவீந்திர ஜடேஜாவும் இதுவரை 10 நோ-பால்கள் வீசியுள்ளனர். 4-வது நாள் ஆட்டம் முடிந்ததும் நிருபர்களை சந்தித்த இந்திய சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் சாய்ராஜ் பகுதுலேவிடம் இது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர், 'சில சம யம் இது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. இதை சரி செய்வதில் தொடர்ந்து கவனம் செலுத்து கிறோம். ஓடிவந்து எப்படி, எந்த நிலையில் பந்தை வீசுவது என்பது குறித்து ஜடேஜா, சரன்ஷ் ஜெயின் ஆகியோர் நிறைய பயிற்சி செய்தனர். ஆனால் சில நேரம் அவர்கள் குறிப்பிட்ட பந்தை அதிக முயற்சி எடுத்து வீசும் போது அவர்களை அறியாமலேயே கிரீசை தாண்டி விடுகிறார்கள். இந்த தவறை அவர்கள் திருத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். வெள்ளைநிற பந்து போட்டி போன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் 'பிரீஹிட்' முறை அமலுக்கு வந்தால் நிச்சயம் நோ-பால்கள் வீசப்படுவது குறையும். எந்த அணியும் 'நோ-பால்' வீசி கூடுதல் பந்து, கூடுதல் ரன்களை விட்டுக்கொடுக்க விரும்பாது' என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/free-hit-rule-in-test-cricket-too-spin-bowling-coachs-suggestion




