கோவை வெள்ளலூர் கறிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 30ம் தேதியன்று சரஸ்வதி என்ற மூதாட்டி தனது உறவினர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த கருப்பு நிற முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் அவரருகில் வந்து, ’கிளினிக் எப்போது திறப்பார்கள்?’ எனவும், ’மருத்துவரின் வீடு எங்குள்ளது?’ எனக் கேட்டுள்ளார். மருத்துவரின் வீடு உள்ள திசையை சரஸ்வதி காண்பித்தபோது, திடீரென அவரது கழுத்தில் அணிந்திருந்த சுமார் 4 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார். இதனால் மூதாட்டி கீழே விழுந்த நிலையில், அருகிலிருந்தவர்கள் அவரை பிடிக்க முயற்சித்தும் தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போத்தனூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமரா காட்சி மூலம் நகை பறிப்பிற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கண்டறிந்தனர். மேலும், குற்றவாளிகள் தங்களது அடையாளத்தை மறைப்பதற்காக முகமூடி அணிந்திருந்ததும், வாகனத்தின் பதிவு எண்ணை மறைப்பதற்காக கருப்பு நிற டேப்பை பயன்படுத்தியிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கே.ஜி. சாவடி அருகே உள்ள ஒரு கல்லூரியில் பயிலும் கல்லூரி மாணவனையும், இதற்கு உதவிய அவரது காதலியையும் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் இணைந்து ஆடம்பரமாக வாழ்வதற்காகவும், மாணவனுக்கு இருந்த கடனை அடைப்பதற்காகவும் வயதான பெண்களை குறிவைத்து நகைகளை பறித்தது தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இருவருக்கும் வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேபாளம்: "கற்பனை செய்து பார்ப்பதற்குக்கூட பயமாக இருக்கிறது" - மீண்டு வந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/lover-couple-arrested-for-snatching-jewelry-to-fund-a-lavish-lifestyle-in-coimbatore




