சென்னை, அவதூறு வழக்குகளில் சட்டமன்ற உறுப்பினர்களை அவசரமாக கைது செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்று ஈ.ஆர். ஈஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி தலைவர் ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- அதிரடியாக கைது தவெக அரசாங்கம் தொடர்ந்து அரசுக்கு எதிரான விமர்சனங்களை வைத்து ஆலோசனை சொல்பவர்களை அதிரடியாக கைது செய்வது ஜனநாயகத்தில் ஏற்புடையதல்ல. சமூக வலைதளங்களில் எதிர் கருத்து பதிவிடுபவர்களையும், அரசியல் மேடைகளில் அரசுக்கு எதிரான கருத்துக்களை பேசுபவர்களையும் அதிரடியாக கைது செய்வது என்பது ஆட்சியாளர்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை என்பதை காட்டுகிறது. சர்வாதிகார போக்கு எதிர்க்கட்சி தலைவர்களை மட்டுமல்ல சட்டமன்ற உறுப்பினர்களையும் கைது செய்வது தொடர் கதையாக இருக்கிறது. அரசியல்வாதிகளை மட்டுமில்லாமல் பத்திரிகையாளர்களையும் கைது செய்வதும், அலைக்கழிக்கப்படுவதையும் சர்வாதிகார போக்காக பார்க்கப்படுகிறது. ஆனால் அதே சமயத்தில் குற்றம் செய்திருக்கின்ற ஆளுங்கட்சிக்காரர்கள் மீது வழக்கு போடாமல் இருப்பதையும், கைது செய்யாமல் இருப்பதையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். எச்சரிக்கை விடப்படுகிறதா? புதிதாக அமைந்திருக்கின்ற தமிழக அரசு ஆக்கப்பூர்வமான மக்கள் நலத்திட்டங்களை தீட்டுவதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் சுணக்கம் காட்டுவதை திசை திருப்புவதற்காக இதைப் போன்ற செயல்பாடுகள் செய்யப்படுகிறதா? சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களையும், மார்க்கண்டேயன் அவர்களையும், பழனி மோசடி பத்திரப்பதிவை விமர்சித்தவர்களையும், தொழில்துறை அமைச்சர் மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர்களின் தவறுகளை சுட்டிக் காட்டியவர்களையும் கைது செய்வதன் மூலமாக எதிர்க்கட்சியில் இருக்கிற தலைவர்களுக்கு இந்த அரசை பற்றி எதுவும் பேசக்கூடாது என்று எச்சரிக்கை விடப்படுகிறதா? கைது தனி மனிதர்களை பற்றி பேசினால் வழக்கு போடுங்கள் நீதிமன்றம் முடிவு செய்யட்டும். காவல்துறை அதிரடியாக சட்டமன்ற உறுப்பினர்களையும், பத்திரிகையாளர்களையும் கைது செய்வது எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதாக அமையும். முன்னாள் முதல்-அமைச்சர் பற்றி தனிப்பட்ட முறையில் எவ்வளவோ எதிர் கருத்துக்களை கடந்த காலங்களில் பேசியிருக்கிறார்கள் என்பதையும் அரசு நினைவில் வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/urgent-arrests-of-mlas-in-defamation-cases-should-be-avoided-er-easwaran




