காத்மண்டு, சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக திபெத் உள்ளது. நேபாள எல்லையில் இமய மலையில் அமைந்துள்ள இப்பகுதியில் நேற்று முன் தினம் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இமயமலையில் பனிப்பாறை உடைப்பு திபெத் - நேபாள எல்லையில் உள்ள பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் நேபாளத்தின் 8 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் உள்நாட்டு மக்கள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட பலர் அடித்து செல்லப்பட்டுள்ளனர். 547 பேர் பலி இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 547 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, வெள்ளத்தில் சிக்கி 977 பேர் மாயமாகியுள்ளதாகவும், அதில் 86 பேர் பாதுகாப்புப்படையினர், 517 பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், 127 பேர் உள்நாட்டினர் என்றும் நேபாள அரசு தெரிவித்துள்ளது. மாயமானவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/sudden-flood-in-nepal-death-toll-rises-to-547




