திருவனந்தபுரம், இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் 295 ரன்கள் இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 295 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜஸ்டின் கிரேவிஸ் அதிகபட்சமாக 101 ரன்கள் குவித்தார். இந்தியா தரப்பில் குல்தீப் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து 296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இந்தியா விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் - கில் இருவரும் களமிறங்கினர். ரோகித் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விராட் கோலி, கில்லுடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதமடித்தார். தொடர்ந்து பொறுப்புடன் விளையாடி வந்த கில், 13 பவுண்டரி, 1 சிக்சருடன் சதமடித்து அசத்தினார். இருவரும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இதனால் இந்திய அணியில் வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/odi-against-west-indies-shubman-gill-shines-with-a-century




