சென்னை, பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;- “தமிழ்நாட்டிற்கு புதிய சட்டமன்றம் தேவை என்பதுதான் பா.ம.க.வின் நிலைப்பாடு. எல்லா வசதிகளுடன் கூடிய, அனைத்து மக்களும் பயனடையும் வகையிலான சட்டமன்றம் அமைக்கப்பட வேண்டும். அனைத்து அதிகாரிகளின் அலுவலகங்களும், அவர்களின் இல்லங்களும் அங்கு இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு நிர்வாக வளாகமாக அல்லது ஒரு நிர்வாக நகரமாக அது இருந்தால் எல்லோரும் பயனடைவார்கள். சென்னைதான் தற்போது தலைமையிடமாக இருக்கிறது. புதிய சட்டமன்றம் சென்னைக்கு அருகில் கூட இருக்கலாம். அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் வந்து செல்வார்கள் என்பதால் அதற்கேற்றவாறு திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-pmks-stance-is-that-a-new-legislative-assembly-is-needed-sowmya-anbumani




