புதுடெல்லி, ஜார்க்கண்ட் மாநில அரசு பணியாளர் தேர்வாணையதால் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகளில் முறைகேடு நடைபெறுவதாக குற்றஞ்சாட்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 24-வது நாளாக நீடிப்பு மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 24-வது நாளாக நீடித்தது. ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் பதவி விலக கோரி அவரது இல்லத்தை வருகிற 20-ந்தேதி முற்றுகையிட போவதாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மாணவர்கள் அறிவித்து இருந்தனர். ஜார்க்கண்ட் கூட்டணி அரசில் இருந்து காங்கிரஸ் கட்சி விலக வேண்டும் என்று ராகுல்காந்திக்கு மாணவர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர். இந்த நிலையில் ஜார்க்கண்ட முதல்-மந்திரி ஹேமந்த் சோரனுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். போராட்டத் தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை சந்தித்து பிரச்சினையை தீர்க்கும்படி அவர் வலியுறுத்தி உள்ளார். அந்த கடிதத்தில் ராகுல் வது காந்தி கூறியிருப்பதாவது:- ஜார்க்கண்டில் மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் கோரிக்கை நியாயமானது. அமைதியான முறையில் போராடுவதற்கான உரிமை ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாக காங்கிரஸ் நம்புகிறது. காங்கிரஸ் முழு ஆதரவு போராட்டங்கள் தொடர்கின்றன. சில மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு உள்ளனர். போராடும் மாணவர்களின் பிரதி நிதிகளை நீங்கள் நேரில் சந்திக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள மாணவர்களின் கருத்துக்களுக்கு செவி சாய்க்க வேண்டும். இப்பிரச்சினைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வும் முழுமுயற்சியை மேற்கொள்ளுங்கள். கடந்த சில மாதங்களாக வினாத்தாள் கசிவு மற்றும் கல்வி முறையில் நிலவும் முறைகேடுகளுக்கு எதிராக போராடும் மாணவர்களுக்கு நாம் முழு ஆதரவை அளித்துள்ளோம். இவ்வாறு அந்த கடிதத்'தில் ராகுல் காந்தி கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/students-protest-in-jharkhand-for-24th-day-rahuls-letter-to-hemant-soren




