திருப்பூர், திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த 38 வயதான விக்னேஷ் என்பவர், பெருமாநல்லூரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் குறுக்கே வந்த மான் மோதியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்படி விக்னேஷுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று ஸ்கேன் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லும்போது ஆக்சிஜன் தீர்ந்ததால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறி விக்னேஷின் உறவினர்கள் மற்றும் சக ஊழியர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/tiruppur-allegation-that-a-private-company-manager-died-due-to-oxygen-running-out-at-the-hospital-relatives-stage-a-road-blockade




