ஜகார்த்தா, அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி இந்தோனேசியா சென்றுள்ளார். அவர் அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்களில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சிவன் கோவில் இந்நிலையில், இந்தோனேசியாவில் ஜாவா தீவில் அமைந்துள்ள இந்து மத வழிபாட்டு தலமான பரம்பானன் கோவிலுக்கு (சிவன் கோவில்) பிரதமர் மோடி இன்று சென்றார். பிரதமர் மோடி வழிபாடு 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு வழிபாடு மேற்கொண்டார். பிரதமர் மோடியுடன் இந்தோனேசிய அதிபர் பிரபோவோவும் இந்த கோவிலுக்கு சென்றார். சிவன் கோவிலில் வழிபாடு மேற்கொண்ட பிரதமர் மோடி கோவிலில் இந்தியாவின் துணையோடு மேற்கொள்ளப்பட உள்ள கோவில் புனரமைப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்களையும் தொடங்கி வைத்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/world/pm-modi-president-subianto-visit-prambanan-temple-in-indonesia




