மொராதாபாத், மொராதாபாத் நெடுஞ்சாலையில் நெய் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து; சாலையில் கொட்டிய நெய்யால் பரபரப்பு ஏற்பட்டது. நெய் வெள்ளம் உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் நெடுஞ்சாலையில், டன் கணக்கில் நெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, சாலையின் நடுவே நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி கவிழ்ந்த வேகத்தில் அதன் கன்டெய்னர் பகுதி உடைந்தது. இதனால் உள்ளே இருந்த நூற்றுக்கணக்கான லிட்டர் நெய், தார்ச்சாலை முழுவதும் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஆறாக ஓடியது. அள்ளிய மக்கள் நெடுஞ்சாலையில் நெய் ஆறாக ஓடுவதை பார்த்த அக்கம் பக்கத்து கிராம மக்களும், அந்த வழியாக சென்ற வழிப்போக்கர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், உடனடியாக தங்களின் வீடுகளுக்கு ஓடி சென்று வாளிகள், மற்றும் பிளாஸ்டிக் டப்பாக்களை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சாலையில் ஓடிய நெய்யை பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு முண்டியடித்தபடி பாத்திரங்களில் அள்ளி சென்றனர். சிலர் கவராடைகளிலும் நெய்யை நிரப்பி சென்ற காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. போக்குவரத்து நெரிசல் இந்த லாரி விபத்தினால் அந்த முக்கிய சாலையில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், கவிழ்ந்த லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/tanker-lorry-overturns-on-road-people-rush-to-collect-ghee




