துபாய், பெண்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்களை அதிவேகமாக கடந்த இளம் வீராங்கனை என்ற சாதனையை இந்தியாவின் ஷபாலி வர்மா படைத்துள்ளார். 114 ஆட்டங்களில் 3,000 ரன்கள் ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் எடுத்தபோது ஷபாலி வர்மா, மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்தார். இதன் மூலம் 114 ஆட்டங்களில் இந்த இலக்கை எட்டிய அவர், அதிவேகமாக 3,000 ரன்களை கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். 22 வயதான ஷபாலி, மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3,000 ரன்களை கடந்த 16-வது வீராங்கனையாகவும், இந்தியாவின் 3-வது வீராங்கனையாகவும் இணைந்தார். பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா 2026 மகளிர் டி20 ஆசிய கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி, 18.1 ஓவர்களில் 55 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 8.4 ஓவர்களில் இலக்கை எட்டியது இதையடுத்து 56 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகளான ஷபாலி வர்மா 12 ரன்களிலும், ஸ்மிருதி மந்தனா 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய பிரதீகா ராவல் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 18 பந்துகளில் 18 ரன்களும், தீப்தி சர்மா 14 பந்துகளில் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் இந்திய அணி 8.4 ஓவர்களில் 57 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/shafali-verma-scripts-history-becomes-fastest-and-youngest-to-get-3000-wt201-runs




