புதுச்சேரி, புதுச்சேரி மாநிலம் இடையார்பாளையம் - ஞானமேடு பகுதியில் உள்ள 6 கோவில்களில் ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 6 கோவில்கள் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் கொம்யூனுக்குட்பட்ட இடையார்பாளையம் - ஞானமேடு பகுதியில் பிரசித்தி விநாயகர் கோவில், எல்லையம்மன் கோவில், கங்கையம்மன் கோவில், ஜலகண்டேஸ்வரர், ஐயனாரப்பன், வீரன் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த 6 கோவில்களிலும் ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் நிறைவடைந்ததும் நேற்று முன்தினம் (15.9.2026) செவ்வாய்க்கிழமை காலை விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அன்றைய தினம் மாலை முதல் கால யாக பூஜைகள் நடைபெற்ன நேற்று 16ஆம் தேதி புதன்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜைகளும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நாளான இன்று காலை நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து கலை 8 மணியளவில் அய்யனாரப்பன், வீரன் ஆகிய கோவில்களிலும், அதைத் தொடர்ந்து பிரசித்தி விநாயகர், ஜலகண்டேஸ்வரர் கோவில்களிலும், கங்கை அம்மன் மற்றும் எல்லை அம்மன் கோவில்களிலும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். முன்னாள் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், பாட்டாளி மக்கள் கட்சி மாநில தலைமை நிர்வாக குழு தலைவர் கணபதி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/devotional/consecration-ceremonies-held-at-six-temples-in-puducherry




