சென்னை, தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) இரண்டாம் நாளான இன்று தாள்–2 தேர்வு தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்றது. 1,67,743 தேர்வர்கள் எழுதினர் இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் மொத்தம் 1,60,929 தேர்வர்கள் எழுதினர். இதற்காக 613 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதிகாலை முதலே தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து, உற்சாகத்துடனும் எதிர்பார்ப்புடனும் தேர்வு அறைகளுக்குள் நுழைந்தனர். தேர்வர்கள் காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை மட்டுமே தேர்வு மையங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர். 9.30 மணிக்குப் பிறகு வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காலை 10.00 மணிக்கு தொடங்கிய தேர்வு பிற்பகல் 1.00 மணி வரை நடைபெற்றது. மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. தேர்வின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், தேர்வு மையங்களுக்கு மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டது. மேலும், பெல்ட், ஷூ மற்றும் ஹை ஹீல்ஸ் அணிந்து தேர்வு அறைக்குள் நுழையவும் அனுமதி வழங்கப்படவில்லை. தாள்–1 தேர்வு இதற்கிடையில், நேற்று நடைபெற்ற தாள்–1 தேர்வு எதிர்பார்த்ததை விட சற்று கடினமாக இருந்ததாக பல தேர்வர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். அதனால், இன்று நடைபெற்ற தாள்–2 தேர்வின் வினாத்தாள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பும், சிறிய பதற்றமும் தேர்வர்கள் மத்தியில் நிலவியது. தமிழகம் முழுவதும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்வு அமைதியான முறையில் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/teacher-eligibility-test-paper-2-167743-candidates-appeared-across-tamil-nadu




