பெங்களூரு, கர்நாடக மாநிலம் தும்கூர் ஊரக தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சுரேஷ். இவரது மகள் ஐஸ்வர்யா. இதனிடையே, ஐஸ்வர்யா நேற்று முன் தினம் மாலை மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஆரத்தி உக்கட அகல்யதேவி மாரம்மா கோவிலுக்கு சென்றார். சப் - இன்ஸ்பெக்டர் கன்னத்தில் அறைந்த ஐஸ்வர்யா கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில் அந்த கோவிலில் பாதுகாப்புப்பணியில் பெண் சப்- இன்ஸ்பெக்டர் சவிதா ஈடுபட்டிருந்தார். அப்போது, கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்த ஐஸ்வர்யா பாதுகாப்புப்பணியில் இருந்த சப் - இன்ஸ்பெக்டர் சவிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் சப் - இன்ஸ்பெக்டர் கன்னத்தில் ஐஸ்வர்யா அறைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சப் - இன்ஸ்பெக்டர் இது தொடர்பாக ஐஸ்வர்யா மீது புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ஐஸ்வர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேவேளை, இந்த சம்பவத்திற்கு பாஜக எம்.எல்.ஏ. சுரேஷ் மன்னிப்புக்கேட்டுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/bjp-mla-s-daughter-slaps-woman-sub-inspector




