சேலம், கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு நேற்று முன்தினம் வினாடிக்கு 9 ஆயிரத்து 786 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதன்காரணமாக ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. இதன்காரணமாக ஐந்தருவி, மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தாலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இந்த நிலையில், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று 7 ஆயிரத்து 598 கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை 10 மணி நிலவரப்படி 8,618 கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் அணைக்கு நீர்வரத்தானது தண்ணீர் திறப்பை விட குறைவாகவே இருப்பதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அணையின் நீர்மட்டம் 88.21 அடியாக சரிந்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக 12000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/inflow-to-mettur-dam-increases-2




