கும்பகோணம், கும்பகோணம் மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த 1 டன் பழைய டயர்கள் அகற்றப்பட்டு உள்ளது என்று ஆணையர் சுதா கூறினார். டெங்கு காய்ச்சல் இது குறித்து கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் சுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தவும் கொசுப்புழுக்களை கட்டுப்படுத்தவும் கும்பகோணம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. அதன்படி டெங்கு பரப்பும் ஏ.டி.எஸ்.கொசு உற்பத்தியை தடுக்க நகர் பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் கடைகள், காலிமனைகள், பள்ளி கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்களில் ஆய்வுகள் நடந்து வரு கிறது. கொசு பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கூட்டு துப்புரவு பணி மேற்கொண்டு பிளாஸ்டி கப்புகள், தேங்காய் சிரட்டைகள், டயர்கள், உடைந்த பாத்திரங்கள் ஆகியவற்றில் உள்ள கொசுப்புழுவை கண்டறிந்து அழிக்கப்பட்டு வருகிறது. 1 டன் பழைய டயர்கள் கோரிக்கை வடக்கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு தடுப்பு பணிகளில் வியாழக்கிழமை தோறும் மாநகர பகுதிகளில் பயன்பாடற்ற டயர் களை கண்டறிந்து அப்புறப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன்படி கும்பகோணம் மாநகராட்சி பகுதியில் பயன்படாத டயர்கள் சுமார் 1 டன் அளவில் சேகரித்து அகற்றப்பட்டு உள்ளது. 153 களப்பணியாளர்கள் மூலம் வீடுகளில் பயன்படுத்தும் சிமெண்டு தொட்டி, டிரம் ஆகியவற்றில் கொசுப்புழு உற்பத்தியாகாமல் இருப்பதனை ஆய்வு செய்து உறுதிபடுத்தும் பணி நடக்கிறது. கிருமி நாசினி மருந்து பணியாளர்கள் மூலம் திறந்து இருக்கும் பொருட்களை மூடி வைத்து வாரம் ஒருமுறை பிளிச்சிங் பவுடர் கொண்டு தேய்த்து கழுவி சுத்தம் செய்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. முதிர்ந்த கொசுக்களை கட் டுப்படுத்த கிருமி நாசினி மருந்து அடிக்கும் பணிகள் உரிய முறையில் நடந்து வருகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/1-tonne-of-old-tires-removed-to-control-dengue-fever-in-kumbakonam-corporation




