ஆக்ரா, உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள ரேணுகா தாம் காலனியில் வசித்து வந்தவர் சுரேந்திர குமார் ஷர்மா (44). இவருக்கும் இவரது மனைவி ரூபி ஷர்மாவுக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த மே 17ஆம் தேதி இரவு கணவர் சுரேந்திரா வீட்டிற்கு வந்தார். அப்போது ரூபி ஷர்மா பாயசத்தை கொடுத்தார். அதை வாங்கி குடித்த கணவர் சிறிது நேரத்தில், அவர் மயங்கிய நிலையில் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். உடலை புதைத்துள்ளார் கொலைக்கு பின், வீட்டின் குளியலறை தரையை ஆழமாக குழி தோண்டி சுரேந்திராவின் உடலை புதைத்துள்ளார். அதன் மேல் சிமெண்ட் பூசி, புதிதாக டைல்ஸ் கற்களை பதித்துள்ளார். இதனை தொடர்ந்து, கடந்த மே 26 அன்று சிகந்திரா காவல் நிலையத்திற்கு சென்ற ரூபி, தனது கணவரை காணவில்லை" என்று அழுதுகொண்டே புகார் அளித்துள்ளார். அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கணவர் பிரிந்த சோகத்தில் இருப்பது போல் தொடர்ந்து 45 நாட்களாக நாடகமாடி வந்துள்ளார். விசாரணை நேற்று ரூபியின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் குளியலறையை சோதனை செய்தபோது, அங்கு புதிதாக டைல்ஸ் ஒட்டப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக குளியலறை தரையை உடைத்து தோண்டியபோது, உள்ளே புதைக்கப்பட்டிருந்த சுரேந்திராவின் அழுகிய சடலம் கிடைத்தது. கைது குற்றத்தை ஒப்புக்கொண்ட ரூபி ஷர்மாவை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த குற்றத்தில் வேறு யாரேனும் உதவினார்களா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/uttar-pradesh-woman-arrested-for-murdering-husband-and-burying-him-in-the-bathroom



