சென்னை, சென்னை தலைமைச் செயலகத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:- நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 30 ஆண்டுகளில் நான் ஆற்றிய ஆங்கில உரைகளின் தொகுப்புகள் 4 தொகுப்புகளாக அச்சிடப்பட்டு. அதை டெல்லியில் 'கான்ஸ்டிடியூஷன் கிளப்'பில் ஆகஸ்டு 4-ந் தேதியன்று வெளியிட திட்டமிடப்பட்டது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அந்த நூல்களை வெளியிட இருக்கிறார். அவற்றின் முதல் பிரதியை பெற்றுக்கொள்ள முதல்-அமைச்சர் விஜய் இசைவளித்தார். கூட்ட நெரிசல் ஆனால், நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்றால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், அந்த நிகழ்ச்சியிலே பங்கெடுப்பதை தவிர்த்துவிடலாம் என்று முதல்-அமைச்சரிடம் கூறினேன். மேலும், அதே நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு சென்னையில் வெளியிடும்போது அதில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-not-participating-in-delhi-book-launch-event-vaiko




