மங்களூரு, கர்நாடகாவில் உள்ள ஒரு கே.எப்.சி. கடையில் கெட்டுப்போன சிக்கன் விற்பனை செய்ததாக எழுந்த புகாரையடுத்து அந்த கடையில் அதிகாரிகள் சோதனை செய்து உணவு மாதிரியை எடுத்துச் சென்றனர். கெட்டுப்போன சிக்கன் கர்நாடக மாநிலம் மங்களூரு கே.எ.ராவ் சாலையில் சிட்டி சென்டர் வளாகம் உள்ளது. இங்குள்ள கே.எப்.சி உணவகத்தில் இருந்து ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வாங்கிய சிக்கன் உணவு கெட்டுப் போய் துர்நாற்றம் வீசியதாக சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் உணவகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு கடையின் சமையலறை, பொருட்கள் மற்றும் சேமிப்பு கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்த சிக்கன் மற்றும் உணவு பொருட்களின் மாதிரியை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். உணவக குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த விவகாரத்தில் ஆய்வக அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பிற நிறுவனத்திலும் ஆய்வு இதேபோல் மகாராஷ்டிராவிலும் உணவகங்கள் மற்றும் விரைவான டெலிவரி நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் சுகாதாரம், உணவுப் பொருட்களை சேமித்தல் மற்றும் கையாளுதல் தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கே.எப்.சி,ஸ்டார்பக்ஸ், பீசா கட், பர்கர் கிங் போன்ற உணவு நிறுவனங்களுக்கும் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/karnataka-spoiled-chicken-at-kfc-officials-conduct-raid




