சென்னை, 10-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் 2-வது கட்டப் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. இதில் மதுரை பேந்தர்ஸ் அணிக்கு எதிரான 23-வது லீக் போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. திருப்பூர் தரப்பில் குர்ஜப்நீத் சிங் மற்றும் அஜய் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தொடர்ந்து 158 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் அணி, 17.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. பிரதோஷ் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதுடன், ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இதன் மூலம் திருப்பூர் அணி 14 பந்துகள் மீதமிருந்த நிலையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-tiruppur-defeats-madurai-team




