Full artikkel
முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Full artikkel — se lenken under

Publisert
27. juni 2026
Kildenavn
Vikatan
Land
India
முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Full artikkel — se lenken under

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம (Atomic Minerals) சுரங்கத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அரசாணை விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இத்திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்த தமிழக வெற்றிக் கழகம், தற்போது ஆட்சியில் இருக்கும் நிலையில் அதே திட்டத்திற்கான நில ஒதுக்கீட்டை நீட்டித்திருப்பது இரட்டை நிலைப்பாடாக விமர்சிக்கப்படுகிறது. மேலும் ஓராண்டுக்கு நில ஒதுக்கீடு நீட்டிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்காக 1144.0618 எக்டர் பரப்பளவு கொண்ட நில ஒதுக்கீட்டு ஆணை காலாவதியாக இருந்த நிலையில், அதன் காலக்கெடு முடிவடையும் கடைசி நாளிலேயே மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சுரங்கம் இந்த நீட்டிப்பு காரணமாக, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்திய அரிய மண் வளங்கள் நிறுவனம் (IREL - Indian Rare Earths Limited), கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தை மீண்டும் முன்னெடுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மீண்டும் அனுமதி கோரும் IREL நில ஒதுக்கீட்டு ஆணை நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கான தனது விண்ணப்பத்தை மீண்டும் பரிசீலித்து அனுமதி வழங்க பரிந்துரைக்க வேண்டும் என்று கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்துக்கு (Coastal Zone Management Authority) IREL நிறுவனம் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அணுக்கனிம சுரங்கத் திட்டம் மீண்டும் நிர்வாக ரீதியாக நகரத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னர் கடும் எதிர்ப்பு ஆனால், இதே அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்தபோது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2024 நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற்ற தவெக செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் அணுக்கனிம மணல் அகழ்வு மற்றும் சுரங்கத் திட்டங்கள் சுற்றுச்சூழலுக்கும் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி, இத்திட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. முதல்வர் விஜய் அரசியல் சர்ச்சையாக மாறுமா? ஒருபுறம் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய கட்சி, மறுபுறம் ஆட்சிக்கு வந்த பிறகு அதே திட்டத்திற்கான நில ஒதுக்கீட்டை நீட்டித்திருப்பது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது “அன்று எதிர்ப்பு, இன்று அனுமதி” என்ற விமர்சனத்தை முன்வைத்து நில ஒதுக்கீட்டு நீட்டிப்பு என்பது நிர்வாக ரீதியான நடவடிக்கையா அல்லது திட்டத்தை முன்னெடுக்கும் அரசியல் முடிவா என்பது குறித்து தமிழக அரசின் விளக்கம் எதிர்பார்க்கப்படுகிறது. 'இதுதான் சரியான நேரம்!' - தோழமை கட்சிகளின் கூட்டத்தை கூட்டும் முதல்வர் விஜய்! - பின்னணி என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் குற்றவாளியாக உள்ள வழக்கில், மறு விசாரணை நடத்த வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த வா.புகழேந்தி தொடர்ந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தை அணுக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரவீன் கடந்த 2016 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், அதியூர் பிரிவு மேம்பாலம் அருகே பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் தன் கல்லூரி நண்பர்களுடன் காரில் அதிவேகமாக வந்து எதிரே வந்த காரில் மோதிய விபத்தில் உடன் பயணித்த வீரசுரேகா என்ற பெண் உயிரிழந்தார். இந்த வழக்கை விசாரித்த அவினாசி நீதிமன்றம் காரை ஓட்டிச் சென்ற பிரவீனுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக பிரவீன் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த நிலையில் 'இந்த வழக்கை போலீஸார் முறையாக விசாரிக்காததால் மறு விசாரணை நடத்த வேண்டும்' எனக் கோரி அ.தி.மு.க ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த வா.புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். புகழேந்தி அந்த மனுவில், `பொள்ளாச்சி ஜெயராமன் மகன் கல்லூரி பெண்களுடன் காரில் பயணித்தபோது கார் விபத்துக்குள்ளானதாகவும், ஒரு பெண் உயிரிழந்து மற்றவர்கள் காயம்பட்டதாகவும், எனவே அஜாக்கிரதையாகவும் அதிவேகமாக கார் ஓட்டி சென்று விபத்து ஏற்பட்டதாக அவிநாசி நீதித்துறை நடுவர் முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அரசியல் பின்புலம் காரணமாக இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை. அந்த காரில் கல்லூரி மாணவிகள் பயணித்தது ஏன் என்ற கோணத்தில் விசாரிக்கப்படவில்லை. வழக்கில் காட்டப்பட்ட கார், சம்பவத்தில் ஈடுபட்ட கார் கலர் இல்லை, மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் ஆவணங்களை விசாரணை அதிகாரி முறையாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. எனவே, இந்த வழக்கில் மறு விசாரணை நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு கொடுத்த மனு நிராகரிக்கபட்டது. எனவே இந்தச் சம்பவத்தின் உண்மை நிலையை வெளிக்கொண்டுவர இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்' என்று தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், 'தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மனுதாரரின் மேல் முறையீடு மனு நிலுவையில் உள்ள திருப்பூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மறு விசாரணை குறித்து அணுகலாம்' என உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.

மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள தனியார் தங்கு விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தவெக ஆட்சி தொடராது என ஸ்டாலின் கூறியது தொடர்பான கேள்விக்கு, ``அவர் எந்தக் கோணத்தில் இந்தப் பிரச்னையைப் பார்க்கிறார் எனத் தெரியவில்லை. எங்களைப் பொறுத்த வரைக்கும் ஆதரவு அளிக்கின்ற அத்தனைக் கட்சிகளும் வாக்கு தவிர வாய்ப்பில்லை. விசிக, இடதுசாரிகள், ஐ.யூ.எம்.எல் ஆகிய கட்சிகள் தவெக-விற்கு அளித்த வாக்குறுதிகளைக் கட்டாயம் காப்பாற்றுவார்கள். காங்கிரஸ் எல்லா கட்சிகளுக்கும் முன்னதாகவே தவெக அணிக்கு ஆதரவு மட்டும் அல்லாமல், `கூட்டணியில் இணைகிறோம்... நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என இந்தக் கூட்டணி தொடரும்' என்று அறிவித்துவிட்டு, இந்தக் கூட்டணி உறவை உறுதிப்படுத்தினார்கள். விசிக தலைவர் திருமாவளவன் இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு நல்குகிறார்கள்... ஐந்தாண்டுகள் வரை இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்பதை இடதுசாரிகள் திரும்பத் திரும்ப உறுதிப்படுத்தி வருகிறார்கள். அதே நிலைப்பாட்டைத்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் முன்னெடுக்கிறது. எனவே இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் வெற்றிகரமாக இயங்கும் என்பதை, பெரிதும் நம்புகிறேன். புதிய கூட்டணி அறிவிப்பு அங்கு பேசும்போது தான் தெரியும். நான் எப்படிச் சொல்ல முடியும். தேநீர் விருந்து என்ற அடிப்படையில்தான் அழைத்திருக்கிறார்கள். கட்சித் தலைவர்கள் மட்டுமன்றி சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கிறோம். ராஜினாமா செய்பவர்கள் அதிமுக-வில் என்ன பிரச்னை... எதனால் பதவி விலகுகிறார்கள் எனக் கேட்க வேண்டும். அதுதான் விவாதிக்கப்பட வேண்டும். அதைத் தாண்டி யூகங்களின் அடிப்படையில் விவாதங்கள் நடக்கின்றன. அதிமுக எடப்பாடி பழனிசாமி அதிமுக-வுக்கு என்ன பிரச்னை... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால் அதிமுக-வுக்குள் நிகழும் உட்கட்சி முரண்கள் என்னென்ன என்பதைத்தான் வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும். அவ்வாறு இல்லாமல் யூகங்களின் அடிப்படையில் விவாதங்களின் திசையை மாற்றுகிற முயற்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. 6 பேர் இதுவரை அதிமுக-வில் பதவி விலகியிருக்கிறார்கள் என்றால், இது அதிமுக-வில் நிகழ்கிற மிக முக்கியமான பிரச்னை, தீவிரமாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று. இந்தக் கேள்விகளை அதிமுக-வினரிடம் வெளிப்படையாக கேட்க வேண்டும். அவர்கள்தான் நாட்டு மக்களுக்கு இதனை தெளிவுபடுத்த வேண்டும். பள்ளிகளில் சாதிய ஊக்குவிப்பு தடுப்பு நடவடிக்கை என்பதை வரவேற்கிறேன். செங்கோட்டையன் மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும்போது சாதியையும் ஒரு தரவாக பதிவுசெய்ய வேண்டும் எனக் கருத்து சொன்னபோது, கடுமையான எதிர்ப்பு வந்தது. தற்போது அந்த முயற்சி கைவிடப்பட்டிருக்கிறது விஜய் - திருமாவளவன் முதலமைச்சர் சாதி அடையாளங்களை ஊக்கப்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் என்பதை அவருடைய பேச்சின் மூலம் நம்மால் உணர முடிகிறது. அது தொடர வேண்டும் என்பது நம்முடைய வேண்டுகோள். அமைச்சர் சரத் விஷயத்தில் கட்டாயமாக நிரூபிக்கப்பட வேண்டியதுதான். ஆதாரமில்லாமல் ஒரு கருத்தைச் சொல்லி விட முடியாது. ஆனால் ஒன்று அனைவரும் அறிந்த உண்மை, தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருக்கிறது. கஞ்சா மாநிலங்கள் விட்டு மாநிலங்கள் செல்கிறது, குக்கிராமங்களில் கிடைக்கிறது. எந்தக் கட்சி என்று விவாதிப்பதை விட இந்தியா முழுவதிலும் இது பரவுகிறது. இதற்கு யார் பிண்ணனி என்பதைக் கண்டறிந்து, கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதுதான் முக்கியமான சவாலாக உள்ளது" என்றார். விசிக: `திருச்சி கிழக்கில் நான் போட்டியிடுகிறேனா..?' - திருமாவளவன் விளக்கம்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.

அ.தி.மு.க-வில் அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க-வில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று கோவையிலிருந்து சென்னை செல்வதற்காக எஸ்.பி. வேலுமணி, கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த எஸ்.பி. வேலுமணி, “நான் சென்னைக்குப் புதுசாவா போறேன்? வாரத்தில் 2 நாள் போகிறேன். ஒரு பரபரப்பும் இல்லை, நீங்கள்தான் பரபரப்பு பண்ணிட்டிருக்கீங்க. அ.தி.மு.க-வில் இருந்து தி.மு.க, த.வெ.க செல்ல நீங்களே சொல்கிறீர்களா? சென்னை போகிறேன், அவ்வளவுதான். மீடியாவில் உள்ள நீங்கள் அ.தி.மு.க-வில் நாங்க எல்லாம் இருக்கக் கூடாது என முடிவு செய்து செய்தி போடுகிறீர்களா எனத் தெரியவில்லை. காலையில் இருந்து நீங்கள்தான் பிளாஸ் நியூஸ் போடுகிறீர்கள்” என்றார். எடப்பாடி பழனிசாமி மற்றும் சபாநாயகரைச் சந்திக்க உள்ளீர்களா, சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறீர்களா என்ற கேள்விகளுக்கு, “எதுவாக இருந்தாலும் உங்களைக் கூப்பிடுகிறேன்” என்றபடி பதில் அளிக்காமல் சென்றார். எஸ்.பி. வேலுமணி சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, த.வெ.க. அரசிற்கு ஆதரவு அளித்த எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. இதன்படி கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து எஸ்.பி.வேலுமணியை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். பின்னர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் மீண்டும் கட்சியில் இணைந்த நிலையிலும், அவருக்கு பழைய பதவி வழங்கப்படாமல் இருந்து வந்தது. இதனிடையே எஸ்.பி. வேலுமணிக்கு அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் என்ற மாநில அளவிலான பதவி வழங்கப்பட்டாலும், அவரது பழைய பதவியான அ.தி.மு.க-வின் கோவை புறநகர் தெற்கு மாவட்டம் என்பது, கோவை புறநகர் மத்திய மாவட்டம், புறநகர் தெற்கு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டு அவரது போட்டியாளர்களான செ.ம.வேலுசாமி மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல அவரது ஆதரவாளர்களுக்கு மீண்டும் பழைய பதவிகள் வழங்கப்படாததால் எஸ்.பி.வேலுமணி அதிருப்தியில் உள்ளார். இதனால் எஸ்.பி. வேலுமணி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க-வில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் எஸ்.பி. வேலுமணியின் சென்னை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய எஸ்.பி. வேலுமணி; அதிமுக-வில் இருந்து வெளியேற திட்டமா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Hold deg informert med de siste nyhetene fra pålitelige kilder