தூத்துக்குடி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. ஆவணித் திருவிழா முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா வருகிற 31-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க இருக்கிறது. இந்த விழா வருகிற 11-ந்தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாளான்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப் பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 5.15 மணிக்கு மேல் 5.40 மணிக்குள் திருவிழா கொடியேற்றப்படும். மாலையில் அப்பர் சுவாமிகள் கோவிலில் இருந்து தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சியும், இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரதேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கும். சிவப்பு சாத்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வருகிற 4-ந்தேதி மேலக்கோவிலில் இரவு 7.30 மணிக்கு குடைவருவாயில் தீபாராதனை நடக்க இருக்கிறது. பின்னர் சுவாமி, அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். 6-ந்தேதி 7-ம் திருநாளன்று அதிகாலை 5 மணிக்கு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு கோவிலில் இருந்து சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கும் எழுந்தருளுவார். அங்கு மாலையில் சுவாமிக்கும், அம்பாள்களுக்கும் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெறும். மாலை 4 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். தேரோட்டம் 8-ம் திருநாளான வருகிற 7-ந்தேதி அதிகாலை 6 மணிக்கு சுவாமி சண்முகர் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருவார். பகல் 12 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்வார். சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருநாளான வருகிற 9-ந்தேதி காலை 7 மணிக்கு நடக்கும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/aavanit-festival-at-thiruchendur-temple-flag-hoisting-on-31st




