தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் பாடி ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பின்னணிப் பாடகி ஜானகி நேற்று (ஜுலை.11) காலமானார். இவர் குறித்த பல்வேறு தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2013 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்த பத்ம பூஷன் விருதை ஜானகி வாங்க மறுத்திருக்கிறார். ஜானகி இதுதொடர்பாக அவர் பேசியிருந்த வீடியோ தற்போது வைரல் வருகிறது. அந்த வீடியோவில், "திரைத்துறையில் 55 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல மொழிகளில், எண்ணற்ற பாடல்களை நான் பாடியிருக்கிறேன். இவ்வளவு அற்புதமாகப் பாடியிருக்கும் போது, என்ன மாதிரியான விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும்? ஜானகி மறைவு: "சொந்த வாழ்வில் எத்தனையோ துக்கங்களைத் தாங்கியிருக்கிறார்." - இளையராஜா இரங்கல் பாரத ரத்னா போன்ற மிக உயரிய விருதை வழங்கியிருந்தால் கூட அதை ஏற்றுக்கொண்டிருப்பேன். அதைத் தவிர எனக்கு வேறு எந்த விருதும் வேண்டாம். எனக்கு விருதுகள் மீதும் துளிக்கூட ஆர்வமில்லை. நான் எந்த ஒரு விருதுக்காகவும் பாட வரவில்லை. நான் பாடியதெல்லாம் என்னுடைய அன்பான ரசிகர்களுக்காக மட்டுமே. ஜானகி அரசுக்கு விருப்பமிருந்தால் அவர்கள் பாரத் ரத்னா கொடுக்கட்டும், இல்லையென்றால் எந்த விருதும் கொடுக்கத் தேவையில்லை. என் ரசிகர்களும் நண்பர்களும் எப்போதும் என்னோடு இருக்கிறார்கள். அதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெகுமதி. அதைவிடப் பிரமாண்டமான ஒரு விருது இந்த உலகத்தில் வேறு எதுவுமே இல்லை" என்று பேசியிருக்கிறார். 'நான் பல மொழிகளில், சரியான உச்சரிப்பில் பாடியுள்ளேன், அதற்கு அங்கீகாரமாக அரசு எனக்கு பாரத ரத்னா கொடுத்தால் மட்டும் வாங்குவேன், நான் விருதுக்காக பாடவில்லை, மக்கள் மனதில் இடம்பெற பாடுகிறேன். - பத்ம பூஷன் விருதை நிராகரித்து பேசிய ஜானகி அம்மா — Induja Ragunathan (@R_Induja) July 12, 2026 முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://cinema.vikatan.com/kollywood/janaki-refuses-padma-bhushan-after-55-years-viral-video




