ஈரோடு, ஈரோடு மாவட்டம், திண்டல் பவளத்தாம்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோ - புவனேஸ்வரி தம்பதியின் மகன் பிரணவ் (17). இளங்கோ, குமாரபாளையம் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியில் டெக்ஸ்டைல் பிராசசிங் துறை தலைவராகவும், அவரது மனைவி புவனேஸ்வரி ஈரோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் ஐ.டி. பிரிவு பேராசிரியையாகவும் பணியாற்றி வருகின்றனர். உதவித்தொகை இவருக்கு, அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலை, நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்புக்கு, உதவித்தொகை மற்றும் தங்கி படிக்க வசதியாக, 3.55 கோடி ரூபாய் நிதி உதவியை வழங்கியுள்ளது. இதனால், பொது சுகாதாரம், பயன்பாட்டு கணிதம் குறித்து அவர் பயிலவுள்ளார். அமெரிக்காவின் மிக பழமையான பயன்பாட்டு கணித பாடத்திட்டமும், ஐவி லீக் பல்கலையில் மிக பழமையான பொறியியல் திட்டமும் இந்த பல்கலையில் உள்ளன. ஈரோடு சி.எஸ்., அகாடமியில் க0ம் வகுப்பு வரையிலும், பிளஸ் 1, பிளஸ் 2வை, கோவை சி.எஸ்., அகாடமியிலும் பிரணவ் படித்தார். எட்டாம் வகுப்பு படித்த போது, தேசிய அமைப்பான டெக்ஸ்டிரிட்டி குளோபல் மூலம் அடையாளம் காணப்பட்டு, வழிகாட்டுதலும், பயிற்சியும் பெற்றார். பிரணவ் கூறுகையில், "டெக்ஸ்டிரிட்டி என் சிந்தனை, கற்றல் மற்றும் தலைமைத்துவ அணுகுமுறையை மாற்றியுள்ளது. பிரவுன் பல்கலையில் படிக்கும் வாய்ப்பை பெறுவது மிகப்பெரிய கவுரவம். வரும், 27ல் அமெரிக்கா செல்கிறேன்," என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/erode-student-gets-rs-355-crore-scholarship-to-study-at-brown-university-in-the-us




