கோவை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் விக்னேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- டாஸ்மாக் கடைகளில் விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கூறுகிறீர்கள். இதற்காக அடுத்த 3 அல்லது 4 நாட்கள் அதாவது 27-ந் தேதிக்கு பிறகு புதிய நடைமுறையை கொண்டுவர இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கிணத்துக்கடவில் அமைச்சர் விக்னேஷ் கூறுகையில், டாஸ்மாக் கடைகளை ரெஸ்டோ பார் ஆக மாற்றலாமா? தனியாருக்கு கொடுக்கலாமா? டாஸ்மாக் கட்டமைப்பு வசதியை மாற்றிடலாமா? டாஸ்மாக் கடையை அகற்றிவிட்டு என்ன பண்ணலாம் என்ற கருத்துக்களுடன் கலந்துரையாடல் நடந்தது. இதுகுறித்த முடிவு சீக்கிரம் வரும் என்றார். ஜனநாயகன் படம் பார்க்க முதல்-அமைச்சரிடம் விடுமுறை கேட்டீர்களா? என்ற கேள்விக்கு அமைச்சர் விக்னேஷ், நான் எங்கே விடுமுறை கேட்டேன். எங்கே அந்த வீடியோ இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/plan-to-privatize-tasmac-shops-minister-vignesh-speaks-to-the-press




