புதுடெல்லி, டெல்லியில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்தியது. இதில் உலகளா விய மனித உரிமை சாம்பியன் என்ற முறையில் பிரதமர் மோடியின் பேச்சு அமையவில்லை என காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், மக்கள் ஜனநாயக கட்சித்தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்து உள்ளார். அவர் கூறுகையில், 'ஜவஹர்லால் நேரு காலம் முதலே, இந்தியா ஒரு சுதந்திரமான வெளியுறவு கொள்கையையும் அணிசேரா கொள்கையையும் கொண்டிருப்பதில் எப்போதும் பெருமை கொள்கிறது. இருப்பினும் சுமார் 22,000 அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்ட காசா பற்றி நமது தரப்பிலி ருந்து எதுவும் கூறவில்லை. மேலும் ஈரானின் தலைவர் கொல்லப்பட்டது. ஒரு பள்ளிக்குள் சுமார் 150 மாணவிகள் கொல்லப்பட்டது குறித்தும் ஒரு வார்த்தை கூட இல்லை' என அதிருப்தி தெரிவித்தார். மாநாட்டை தலைமை ஏற்று நடத்தும் வாய்ப்பு கிடைத்தும் இதை பேசாதது ஏமாற்றம ளிப்பதாக கூறிய அவர், நாற்காலி கிடைத்தும், நமது வாய் அடைக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/relatives-will-no-longer-have-positions-in-the-party-mayawatis-dramatic-announcement




