திருச்சி, திருச்சி கோட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், திருச்சி வழியாக செல்லும் ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விபரம்; மாற்றுப்பாதையில். நாகர்கோவில் -மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் (16352) வரு கிற 23,26 மற்றும் 30-ந்தேதிகளிலும், கன்னியாகுமரி ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12666) வருகிற 25-ந்தேதியிலும், கன்னியாகுமரி-ஐதராபாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (17070) வருகிற 24 மற்றும் 31-ந்தேதிகளிலும், செங்கோட்டை - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (16848) வருகிற 23,24,25,26,27,28,30,31-ந்தேதிகளிலும் மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும். இதேபோல் குருவாயூர் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) வருகிற 22,23,24,25,26,27,29,30,31-ந்தேதிகளில் மதுரை சந்திப்பை தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும். மேலும், மதுரை பிகானேர் அனுவ்ரத் ஏசி அதிவிரைவு ரெயில் (22631) வருகிற 23-ந்தேதியில் மதுரையில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும். கடலூர் துறைமுகம் -மைசூர் எக்ஸ்பி ரஸ் ரெயில் (16231) வருகிற 31-ந்தேதி கார்மேலாரம், பையப்பனஹள்ளி கேபின், பானஸ்வாடி, யஷ்வந்த்பூர் கேபின், சிக்பானவர், ஹசன் வழி யாக திருப்பி விடப்படும். காரைக்குடி திருச்சி பாசஞ்சர் ரெயில் (56832) நாளை (புதன்கிழமை) முதல் 31-ந்தேதி வரை காரைக்குடியில் இருந்து 25 நிமிடம் தாமதமாக காலை 10.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து உள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/changes-to-guruvayur-express-train-service




