Full artikkel
Doctor Vikatan: எனக்கு வயது 60. சில வருடங்களாக மருக்கள் பிரச்னை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் கறுப்பு நிறத்தில் சிறு சிறு மருக்கள் வருகின்றன. டாக்டரை அணுகிக் கேட்டதற்கு, பெரியதாக இருந்ததால் லேசர் மூலம் நீக்கலாம்... இந்த மருக்களை நீக்க முடியாது என்கிறார். இதற்குத் தீர்வு உண்டா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, சருமநல மருத்துவர் பூர்ணிமா. சருமநல மருத்துவர் பூர்ணிமா. 'ஸ்கின் டேக்' (Skin Tag) என்று சொல்லப்படும் மருக்கள், நமது உடலில் உள்ள இன்சுலின் எதிர்ப்புத்திறன் (Insulin Resistance) காரணமாக ஏற்படுகின்றன. மருத்துவ மொழியில் இவற்றை 'ஆக்ரோகார்டன்ஸ்' (Acrochordons) என்று சொல்வோம். இது வருங்காலத்தில் நமக்குச் சர்க்கரை நோய் (Sugar) வரப்போவதைக் குறிக்கும் அறிகுறியாக இருக்கலாம். நமது சருமத்தில் ஏற்படும் தடிமன் (Skin Thickening) என்ற செயல்முறையினால்தான் கழுத்துப் பகுதியில் கருமை நிறம் மற்றும் மருக்கள் போன்றவை தோன்றுகின்றன. பலரும் இதனை வைரஸ் தொற்றினால் (Viral Etiology) ஏற்படுவதாகக் குழப்பிக்கொள்கிறார்கள். ஆனால், வைரஸ் தொற்றின் காரணமாகவும் மருக்கள் வர வாய்ப்புள்ளது. எனவே, இவை இரண்டையும் சரியாகப் பிரித்தறிந்து, கண்டறிவதற்கு முறையான மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியம். மருவின் அளவு, அது இருக்கும் விதம் மற்றும் அது உடலில் எந்தப் பகுதியில் அமைந்துள்ளது (கழுத்து அல்லது அக்குள் பகுதி) போன்றவற்றை ஆராய்ந்து அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சைகள் அளிக்கப்படும். மருவின் அளவு, அது இருக்கும் விதம், மற்றும் அது உடலில் எந்தப் பகுதியில் அமைந்துள்ளது (கழுத்து அல்லது அக்குள் பகுதி) போன்றவற்றை ஆராய்ந்து அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சைகள் அளிக்கப்படும்.அவள் பதில்கள் - 43- சருமத்தில் தோன்றும் பால் மருக்கள்… நீக்குவது எப்படி? எலக்ட்ரோகாட்டரி (Electrocautery) என்ற சிகிச்சை முறையில் வெப்ப ஆற்றல் (Heat Energy) மூலம் மருக்கள் அகற்றப்படும். எக்சிஷன் (Excision) என்ற முறையில் மருக்கள் சாதாரணமாக வெட்டி அகற்றப்படும். லேசர் (Laser) மூலமும் அகற்றலாம். கிரையோதெரபி (Cryotherapy) என்ற சிகிச்சையில் திரவ நைட்ரஜனை (Liquid Nitrogen) பயன்படுத்தி, மருக்கள் அகற்றப்படும். மருக்களைக் கண்டிப்பாக நீக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவை இருப்பதால் உடலுக்கு எந்தவித பாதிப்போ அல்லது ஆபத்தோ ஏற்படாது. இருப்பினும், கழுத்தில் சங்கிலி (Chain) அணியும்போது அதில் மாட்டி புண் ஏற்பட்டாலோ, உராய்வு காரணமாக ஏற்படும் அசௌகர்யம் ஏற்பட்டாலோ, தோற்றம் காரணமாகவோ சிலர் அவற்றை அகற்றிக்கொள்கிறார்கள். உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Full artikkel — se lenken under




