புதுடெல்லி, எரிபொருள் வினியோக நிலைமை மேம்பட்டுள்ளதால் கிராமம், நகரப்பகுதிகள் என வேறுபாடின்றி ஒரே சீராக கியாஸ் சிலிண்டர் மறு நிரப்பலுக்கான முன்பதிவு இடைவெளிக்காலம் 25 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலிய அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஈரான் மீதான போர் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலக அளவில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டது. இதன் தாக்கம் இந்தியாவி லும் எதிரொலித்தது. இதன் காரணமாக கியாஸ் வினியோகத்தில் சிலிண் டர் மறு நிரப்பலுக்கான முன்பதிவு இடைவெளியில் கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டன. அதன்படி, நகர்ப்புறங்களில் முன்பதிவு இடைவெளி 25 நாட்க ளாகவும், கிராமப்புறங்களில் 45 நாட்களாகவும் நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், போர் ஓய்ந்து எரிபொருள் வினியோக நிலைமை மேம்பட்டுள்ளது. இதனால், கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் முன்பு இருந்த நடைமுறையை மீண்டும் அமல்படுத்த பெட்ரோலிய அமைச்சகம் உத்தர விட்டுள்ளது. இதுகுறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை மந்திரி சுரேஷ் கோபி தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள் ளார். மேலும், இதுதொடர்பான அமைச்சக உத்தரவு நகலையும் அவர் பதிவிட்டுள்ளார். ஒரே சீராக 25 நாட்கள் அதில், கடந்த பிப்ரவரி மாதம் மத்திய கிழக்கில் மோதல் வெடித்தபோது, அமைச்சகம், தற்காலிக தேவை மேலாண்மை நடவடிக்கையாக, எல்.பி.ஜி. மறு நிரப்பல்களை முன்பதிவு செய்வதற்கான காலக்கெடுவை, நகர்ப்புறங்களில் 25 நாட்கள் மற்றும் கிராமப்புறங்களில் 45 நாட்கள் என நிர்ணயித்து இருந்தது. தற்போது, வினியோக நிலை மேம்பட்டு இருப்பதாலும், மறு நிரப்பல் நிலுவை கணிசமாக குறைந்து இருப்பதாலும் அமைச் சகம் தற்போதுள்ள மறு நிரப்பல் முன்பதிவு இடைவெளியைத் திருத்துகிறது. அதன்படி, கியாஸ் சிலிண்டர் மறு நிரப்பலுக்கான முன்பதிவு இடைவெளியை நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என வேறுபாடின்றி ஒரே சீராக 25 நாட்களாக நிர்ணயித்து, அதை உடனடியாக அமல்படுத்துவதற் கான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த உத்தரவு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/lpg-refill-booking-gap-cut-to-25-days-from-45-what-consumers-need-to-know




