பாடகி ஜானகி அம்மாவின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அளித்துள்ளதாக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பாடகி எஸ்.ஜானகி வயது முதிர்வு காரணமாக மைசூரில் காலமானார். அவருக்கு வயது 88. இந்தியத் திரையிசையில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி ரசிகர்களிடம் நீங்காத இடத்தைப் பிடித்தவர். 4 தேசிய விருதுகள், 6 தமிழக அரசு விருதுகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றவர் பாடகி எஸ்.ஜானகி. அவரது மறைவுக்கு திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும்,ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜானகி அம்மாவின் மறைவு மிகுந்த அதிர்ச்சியும் துயரமும் அளித்துள்ளது. அவரது பாடல்களைக் கேட்டு வளர்ந்தவர்களில் நானும் ஒருவன். உயர் ஸ்ருதியிலும் இனிமையாக ஒலித்த அரிய குரல் அவருடையது. அவர் எந்த மொழியில் பாடினாலும் அது நேரடியாக மனதைத் தொடும். இனி அவரது குரல் நம் மனதில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்” என தெரிவித்துள்ளார். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/music-composer-harris-jayaraj-condoles-the-death-of-singer-s-janaki




