மும்பை, எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து சம்பவத்தன்று மும்பைக்கு விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் அதிகளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது எத்தியோப்பியாவை சேர்ந்த அமகது (வயது24), முகமது (20), ஜெமில் (29) ஆகிய பயணிகளின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அவர்களின் பைகளில் தீவிர சோதனை நடத்தினர். அதில் தங்கம் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து அதிகாரிகள் அவர்களி டம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தங்க கட்டிகளை கடத்தி வந்து விமானத்தின் கழிவறையில் மறைத்து வைத்து இருப்பது தெரியவந்தது. கடத்தல் கும்பலை சேர்ந்த விமான துப்புரவு பணியாளர், விமானம் நின்ற பிறகு கழிவறையில் வைக்கப்பட்டுள்ள தங்க கட்டிகளை எடுத்து செல்ல இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் விமான கழிவறைகளில் இருந்த ரூ.18 கோடி மதிப்பிலான 12 கிலோ தங்க கட்டிகளை பறிமுதல் செய் தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து 3 வெளிநாட்டினரை கைது செய்தனர். மேலும் கடத்தலில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர். மற்றொரு சம்பவத்தில் இதே பாணியில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5.63 கோடி மதிப்பிலான 3.76 கிலோ தங்கப்பசையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர். இரு சம்பவங்களிலும் 5 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 15.76 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/1576-kg-of-smuggled-gold-seized-at-mumbai-airport-5-arrested




