சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. தங்கம் விலை தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,12,080-க்கும், கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.14,010-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,155-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.145 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,155-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தங்கம் விலை இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,14,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.130 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,285-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.260-க்கும். கிலோ ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/business/gold-rate-chennai/gold-prices-continue-to-rise-what-is-the-situation-today-2



