குமரி, திருமணம் நிச்சயிக்கப்பட்ட நர்ஸ் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள ஆற்றூர் கல்லுப்பாலம் பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின் ராஜ். இவரது மகள் ஆஷிகா (வயது22). இவர் டிப்ளமோ நர்சிங் படித்துவிட்டு கடந்த 8 மாதங்களாக மார்த்தாண்டம் வெட்டுமணியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 7-ந் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அத்துடன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. மாடியில் இருந்து விழுந்து பலி இந்தநிலையில் சம்பவத்தன்று காலையில் ஆஷிகா வழக்கம்போல் வீட்டில் இருந்து ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு புறப்பட்டு சென்றார். இதையடுத்து இரவு 10.30 மணிக்கு அவர் ஆஸ்பத்திரி மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து விட்ட தாக செல்போன் மூலம் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அங்கு ஆஷிகா பிணமாக கிடந்ததை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆஷிகா ஆஸ்பத்திரி மாடியில் நின்று கொண்டு யாரிடமோ செல்போனில் பேசிக் கொண்டி ருந்துள்ளார். அப்போது திடீரென அவர் மாடியில் இருந்து கீழே விழுந்த சத்தம் கேட்டுள்ளது. உடனே ஆஸ்பத்திரி ஊழி யர்கள் விரைந்து சென்று பார்த்த போது ஆஷிகா ரத்த வெள் ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது செல்போன் உடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து பிணத்தை போலீசார் கைப்பற்றி ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தற்கொலையா? இதுகுறித்து ஆஷிகாவின் தாயார் சுதாராணி (51) மார்த்தாண்டம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படை யில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்துக் கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆஸ்பத்திரி மாடியில் இருந்து நர்ஸ் கீழே விழுந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/engaged-nurse-dies-after-falling-from-hospital-floor




