Full artikkel
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள அக்கிரெட்டிபுதூர் கிராமம், வீரமந்திரி தெருவைச் சேர்ந்தவர் ரங்கன். இவரது மனைவி ரவீனா. இவர்களின் 3 பிள்ளைகள், காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் பயில்கின்றனர். பள்ளி நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்பேரில், பிள்ளைகளுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரம், உடல் தகுதி குறித்த மருத்துவச் சான்று பெறுவதற்காக, கடந்த 22-ம் தேதி பள்ளிக்குப்பத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றார் தாய் ரவீனா. அங்கு பணியில் இருந்த பெண் மருத்துவர் வெங்கடலட்சுமி, `தகுதி சான்றிதழ் வழங்க ஒருவருக்கு ரூ.300 வீதம் 3 பிள்ளைகளுக்கும் சேர்த்து ரூ.900 தர வேண்டும்’ என லஞ்சம் கேட்டிருக்கிறார். ரவீனா, `தன்னிடம் பணம் இல்லை’ எனக் கூறியபோதும், `ஜிபே’ மூலம் பணம் அனுப்பு. இல்லைனா வேறு ஆளை பாருமா’ என்று அதிகார தொனியில் கறார் காட்டியிருக்கிறார் மருத்துவர் வெங்கடலட்சுமி. பள்ளிக்குப்பம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் லஞ்சம் கொடுக்க விரும்பாத ரவீனா, மருத்துவர் பேசியதை தனது செல்போனில் ரகசியமாக ஆடியோ பதிவு செய்துகொண்டார். அந்த ஆதாரத்துடன் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்தார். அதன்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், ரசாயன பவுடர் தடவிய 900 மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை ரவீனாவிடம் கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை எடுத்து சென்று மருத்துவர் வெங்கடலட்சுமியிடம் கொடுத்தார் ரவீனா. மருத்துவர் வெங்கடலட்சுமி அந்த பணத்தை கைநீட்டி வாங்கியபோது, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வெளியே காத்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் உள்ளே சென்று மருத்துவரைக் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து, வேலூர் சிறையில் மருத்துவர் வெங்கடலட்சுமி அடைக்கப்பட்டார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Full artikkel — se lenken under


