காரைக்குடி, காரைக்குடியில் இருந்து திருத்துறைபூண்டி, திருவாரூர் வழியாக சென்னைக்கு தினமும் கம்பன் விரைவு ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கோரிக்கை மனு திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க தலைவர், மாவட்டச் செயலாளர் ஆகியோர் சென்னை தென்னக ரெயில்வே பொதுமேலாளர், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஆகியோருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- காரைக்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி வழியாக இருந்து சென்னை எழும்பூருக்கு இணைப்பு ரெயில்கள் மற்றும் நேரடி விரைவு ரெயில்கள் இயங்கி வந்தன. ஆங்கிலேயர் காலத்தில் இருந்து 1980-ம் ஆண்டு வரை இணைப்பு ரெயில்களும், 1980-ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டு வரை மனோரா விரைவு ரெயிலும், 1988-ம் ஆண்டு முதல் கம்பன் என்ற பெயரிலில் விரைவு ரெயிலும் இயங்கி வந்தன. இந்த ரெயில் மூலம் இப்பகுதி மக்கள் சென்னைக்கு எளிதாக சென்று வந்தனர். அகல ரெயில் பாதை அமைக்கும் பணி அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகளுக்காக 2006-ம் ஆண்டு கம் பன் விரைவில் ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. அகல ரெயில் பாதை அமைக்கப்பட்ட பிறகு தற்போது வாரம் மும்முறை இயங்கும் தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு ரெயில் மற்றும் தாம்பரம்-ராமேஸ்வரம் தின சரி விரைவு ரெயில் ஆகிய ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தாம்பரம்-ராமேஸ்வரம் விரைவு ரெயில் மற்றும் செங்கோட்டை-தாம்பரம் அதிவிரைவு ரெயில் இப்பகுதிக்கு நள்ளிரவு நேரத்தில் வரு கிறது. இதனால் பயணிகள் முழுமையாக இந்த ரெயில்களை பயன்ப டுத்த இயலவில்லை. திருவாரூர்- காரைக்குடி அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டும், சென்னைக்கான ரெயில் சேவை இன்னும் முழுமை யாக கிடைக்கவில்லை. பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது இதன் காரணமாக காரைக்குடி சென்னை வழித்தடத்தில் தினந்தோறும் சென்னை செல்வதற்கான ரெயில் பயணிகள் கூட்டம் ரெயில் நிலையங் களில் நிரம்பி வழிகின்றது. போதுமான ரெயில்கள் இயக்கப்படாதால் பய ணிகள் இடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மீட்டர் கேஜ் காலத்தில் காரைக்குடியில் இருந்து சென்னை எழும்பூருக்கு தினசரி இயங்கி வந்த கம்பன் எக்ஸ்பிரஸ் விரைவு ரெயிலை மீண்டும் அதே நேரத்தில் இயக்க வேண்டும். காரைக்குடியில இருந்து அறந் தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூருக்கு பகல் நேர இன்டர்சிட்டி விரைவு ரெயிலை இயக்க வேண்டும். கம்பன் விரைவு ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் காரைக்குடி-பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி- திருவாரூர் சென்னை எழும்பூர் வழித்தடம் நூறாண்டு பழமை கொண்ட வழித்தடமாகும். ரெயில்வே துறைக்கு அதிகமான வருவாய் தரக்கூடிய இந்த வழித்தடத்தில் மீண்டும் கம்பன் விரைவு ரெயிலை இயக்க வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/demand-to-resume-the-kamban-express-train-service




