சென்னை, ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1.28 லட்சம் கடனை சுமத்தியது திமுக என அமைச்சர் மரிய வில்சன் கூறியுள்ளார். சட்டசபையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ ரகுபதி, "அப்பாவைக் காணோம் எனப் பேசுகிறீர்களே. மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், நான் முதல்வன் என திட்டங்களில் பலனடைந்த மக்களின் மனங்களில் எங்களின் தலைவர் வாழ்கிறார். அண்ணன் சீர் திட்டத்துக்கு 812 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறீர்கள். மூவலூர் ராமாமிர்தம் அம்மையர் திட்டத்தின் கீழ் மட்டுமே ஆண்டுக்கு 1 லட்சம் பெண்கள் எங்கள் ஆட்சியில் பயனடைந்தார்கள். இப்போது எல்லா திருமணமாகும் பெண்களுக்கும் 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை என்றால் தலைக்கு 1 லட்சம் ரூபாய் செலவாகும். ஆக, ஆண்டுக்கு 2000 கோடி ரூபாய் இல்லாமல் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது" என்று கூறினார். அதற்கு பதில் கொடுத்த நிதி அமைச்சர் மரிய வில்சன், "மகளிர் உரிமைத் தொகையில் உங்கள் தலைவர் இருக்கிறார் என்கிறீர்கள். ஒவ்வொருவர் தலையிலும் ரூ.1.28 லட்சம் கடனை சுமத்தியது திமுக. ஒவ்வொருவர் மீதும் ரூ.1.28 லட்சம் கடன் வைத்து சென்றுள்ளார்கள். ஒவ்வொருவர் மீதுள்ள கடனிலும் உங்கள் தலைவர் உள்ளாரா? கடனை விட்டுச் சென்றவர் யார்? உரிமை தொகையில் தலைவரை தேடுவது போல கடனிலும் தேட வேண்டுமே. நிர்வாக குளறுபடிக்கு திமுகவே காரணம் என்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஒவ்வொரு அரசும் கடன் வாங்கிதான் செலவு செய்கிறது. ஆர்.பி.ஐ அனுமதியுடன்தான் கடன் பெறப்பட்டது. கடனை அடைக்க 50 ஆண்டுகள் ஆனாலும் வாய்ப்பில்லை என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு அரசும் கடன் வாங்கி தான் செலவு செய்கிறது. ரிசர்வ் வங்கியின் அனுமதியில்லாமல் கடன் பெற முடியாது என திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/personal-loan-issue-minister-maria-wilson-kn-nehru-heated-debate-in-the-legislative-assembly




