நெல்லை, நெல்லை தச்சநல்லூர் அடுத்துள்ள ராமையன்பட்டி குப்பை கிடங்கில் 3 ஆயிரத்து 904 கிலோ புகையிலை பொருட்கள் புதைத்து அழிக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகர காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 3,904 கிலோ கிராம் எடையுள்ள அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 3,904 கிலோ புகையிலை பொருட்கள் புதைத்து அழிப்பு இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் தலைமையில் நேற்று நடைபெற்ற போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்வின் பொருட்டு, நெல்லை மாநகரில் பறிமுதல் செய்யப்பட்ட 3,904 கிலோ கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவுபடி, போலீஸ் உதவி கமிஷனர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரியின் முன்னிலையில் திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூர் அடுத்துள்ள ராமையன்பட்டி குப்பை கிடங்கில் புதைத்து அழிக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/39-thousand-kg-of-stormwater-materials-buried-and-destroyed-in-nellai




