சென்னை, தமிழகத்தில் அடுத்த ஓராண்டுக்குள் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை கொண்டு வரப்படும் என சென்னை பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் தெரிவித்துள்ளார். ரூ.1-க்கு பிரீபேய்டு சேவை சென்னை பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் சுதாகரராவ் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய வாடிக்கையாளர்களுக்கு, பிரீபேய்டு சேவை வெறும் 1 ரூபாய்க்கு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சிம் கார்டு இலவசமாக வழங்கப்படும். புதிய செயலி 24 நாட்கள் செல்லுபடியாகும் வகையிலான இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகள், 1 ஜி.பி. டேட்டா. தினமும் 100 குறுந்தகவல்கள் (எஸ்.எம்.எஸ்.) பெற முடியும். இந்த சலுகை செப்டம்பர் 12-ந்தேதி வரை கிடைக்கும். இதேபோன்று ஓராண்டு திட்டத்துக்கும், அதிவேக இணைய சேவைக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரீபெய்டு ரீசார்ஜ். போஸ்ட்பெய்டு பில் கட்டணம், டேட்டா பயன்பாடு கண்காணிப்பு, புதிய அதிவேக இணைய சேவை பதிவு, புகார் பதிவு, திட்ட விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை உள்ளடக்கிய வேகமான, மேம்படுத்தப்பட்ட, ஒருங்கிணைந்த 'பி.எஸ்.என்.எல். செல்ப்கேர்' எனும் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை சென்னை பி.எஸ்.என்.எல். எல்லைக்குள் மொத்தம் 1,902 செல்போன் கோபுரங்கள் உள்ளன. இதில், 1,214 கோபுரங்கள் 4ஜி சேவை வழங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளன. இன்னும் 6 மாதங்களில் மீதமுள்ள கோபுரங்களும் மேம்படுத்தப்படும். இந்த பணி முடிவடைந்ததும், தற்போது செல்போன் சேவையில் இருந்து வரும் இடையூறுகள் முற்றிலும் சீராகும். அடுத்த ஓராண்டுக்குள் தமிழகத்தில் பி.எஸ்.என்.எல். 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/bsnl-5g-service-in-tamil-nadu-within-next-year-says-chennai-chief-general-manager




