திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள வடுகர்பேட்டை, அன்னை நகர் பகுதியில் உள்ள தேவனாதன் என்பவரது வீட்டில் உள்ள செப்டிக் டேங்கை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதற்காக, சகானா என்ற தனியார் கழிவு அகற்றும் வாகனத்தின் மூலம் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். 12 அடி நீளமும், 12 அடி அகலமும், 12 அடி ஆழமும் கொண்ட அந்த செப்டிக் டேங்கில் இருந்து கழிவுநீர் உறிஞ்சப்பட்ட பிறகு, அடியில் இருந்த கழிவுகளை சுத்தப்படுத்துவதற்காக கணேஷ் என்பவர் முதலில் உள்ளே இறங்கியுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக தாக்கிய நச்சு வாயு காரணமாக அவர் மயக்கமடைந்தார். மயங்கிய கணேஷை காப்பாற்றுவதற்காக, அவருடன் வந்த முகேஷ்குமார் என்பவரும் கயிற்றைக் கட்டிக்கொண்டு ஏணி வழியாக டேங்கிற்குள் இறங்கியுள்ளார். ஆனால், அவரும் விஷவாயு தாக்கி உடனடியாக மயங்கி விழுந்தார். dead தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புள்ளம்பாடி தீயணைப்புத் துறையினர், ஆக்சிஜன் சுவாசக் கருவிகளை அணிந்து செப்டிக் டேங்கிற்குள் இறங்கி, மயங்கிக் கிடந்த இருவரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அங்கு தயார் நிலையில் இருந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர் பரிசோதித்ததில், இருவருமே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம், குறித்து கல்லக்குடி காவல்நிலைய ஆய்வாளர் ஜாக்குலின் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து, உடல்களைக் கைப்பற்றி உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதோடு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஒருவர் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், மற்றொரு இளைஞர் வடமாநில இளைஞர் என்றும் சொல்லப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.vikatan.com/crime/two-youngsters-died-after-poison-attack-while-cleaning-drainage-in-trichy




