சென்னை, பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் 148-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் 'சமூகநீதி நாளாக' கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் கனவு கண்ட 100 சதவீத வகுப்புவாரி இடப்பங்கீட்டை வென்றெடுப்பதற்காக போராட உறுதியேற்போம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- பகுத்தறிவுப் பகலவன் தந்தைப் பெரியாரின் 148-ம் பிறந்தநாள் இன்று உலகில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தந்தைப் பெரியாரை வணங்கி போற்றுகிறேன். தமிழ்நாட்டில் சமூகநீதிக்காக தொடர்ந்து குரல் எழுப்பி, போராட்டங்களை நடத்தி, வென்றெடுத்துக் காட்டியவர் தந்தைப் பெரியார். அவரது அந்த உறுதி தான், தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிக மிக மோசமான நிலையில் இருந்த வன்னிய மக்கள் உள்ளிட்ட அனைத்து சமூகங்களுக்கும் சமூகநீதியை வென்றெடுப்பதற்கான தொடர்சாலை மறியல் போராட்டத்தை 39 ஆண்டுகளுக்கு முன் அவரது பிறந்தநாளில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை சமூகநீதிக் காவலர் ராமதாசுக்கு ஏற்படுத்தியது. தமிழ்நாட்டில் அனைத்து மக்களுக்கும் 100 சதவீத வகுப்புவாரி இடப்பங்கீட்டை வழங்க வேண்டும் என்பதுதான் தந்தைப் பெரியாரின் கனவு. அதுதான் பாட்டாளி மக்களின் லட்சியம். பெரியாரின் கனவை நனவாக்கவும், பாட்டாளி மக்கள் கட்சியின் லட்சியத்தை வென்றெடுக்கவும் போராடுவதற்கு இந்த நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/the-man-who-raised-his-voice-for-social-justice-and-won-father-periyar-anbumani-tribute




