ஹனோய், தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்களில் இருந்து வியட்நாமுக்கு சுற்றுலா சென்றவர்கள், கடந்த 11-ந்தேதி அங்கு படகு சவாரி யில் ஈடுபட்டனர். இதில் 32 பேருடன் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர், கேரளத்தில் இருந்து 2 பேர், ஆந்திராவில் இருந்து 3 பேர் என 15 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை ஹனோயில் உள்ள இந்திய தூதரகம் தீவிரமாக மேற்கொண்டது. இதற்காக தமிழகத்தில் இருந்து சிறப்பு அதிகாரி ஒருவரும் அனுப்பி வைக்கப்பட்டார். உடல்கள் இதைத்தொடர்ந்து 15 பேரின் உடல்களும் வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நேற்றிரவு மும்பை வந்தன. அங்கிருந்து விமானம் மூலம் 4 பேரின் உடல்கள் சென்னைக்கும், 6 பேரின் உடல்கள் கோவைக்கும் கொண்டு வரப்பட்டன. அயலக தமிழர் நல வாரிய அதிகாரிகள் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரவர்களின் சொந்த ஊருக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. நிதியுதவி இந்நிலையில் வியட்நாமில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி (ex-gratia) வழங்கப்படும் என்று உள்நாட்டு மொபைல் போன் நிறுவனமான லாவா இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது. 'லாவா' நிறுவனம் இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தக் கடினமான சூழலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் துணையாக நிற்கும் வகையில், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் 'லாவா' நிறுவனம் ரூ.25 லட்சம் நிதியுதவியை (ex-gratia) வழங்கும். தேவையான சரிபார்ப்பு மற்றும் ஆவண நடைமுறைகளுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிதியுதவி நேரடியாக வழங்கப்படும். மனிதாபிமான அடிப்படையில், தாமாக முன்வந்து இந்த உதவி வழங்கப்படுகிறது. உயிரிழந்தவர்கள் 'லாவா' குடும்பத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்களாகத் திகழ்ந்தவர்கள். ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் அவர்களின் குடும்பத்தினருடன் நாங்கள் உறுதுணையாக நிற்பதோடு, இந்தக் கடினமான காலகட்டத்தில் அவர்களுக்குத் தேவையான ஆதரவையும் வழங்குகிறோம்” என்று தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/lava-to-provide-financial-assistance-of-rs-25-lakh-to-vietnam-boat-tragedy-victims-family




