பாட்னா, பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் ஆரா ரெயில் நிலையம் அருகே அலிபுர்துவாரில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த மகானந்தா எக்ஸ்பிரஸ் ரெயில் சிக்னல் பழுது காரணமாக தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிக்னல் தவறாக மாறியதால் ரெயில் இன்ஜின் உள்பட மூன்று பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின. அதிகாலை நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தினால் பயணிகள் மத்தியில் பெரும்பதற்றம் ஏற்பட்ட போதிலும் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித உயிர்சேதமோ காயமோ ஏற்படவில்லை. இதற்கிடையில் விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்பு குழுவினர் பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிக்னல் தொழில்நுட்ப கோளாரை முன்கூட்டியே சரி செய்யாமல் விட்ட ஆரா ரெயில் நிலைய மேலாளர் என்.கே.ராய் உடனடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தால் டெல்லி-ஹவ்ரா முக்கிய ரெயில் வழித்தடத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் விபத்துக்குள்ளான ரெயில் சுமார் மூன்றரை மணி நேர தாமதத்திற்கு பிறகு மாற்று ஏற்பாடுகளுடன் மீண்டும் டெல்லி நோக்கி அனுப்பி வைக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/india/express-train-accident-in-bihar-3-coaches-derail




