கோவை, கோவை வருகை கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் ஜி.கே.என்.எம். மருத்துவமனை உள்ளது. இங்கு ஜி.கே.என்.எம். நர்சிங் கல்லூரி திறப்பு விழா நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் டெல்லியில் இருந்து விமா னம் மூலம் கோவை வருகிறார். பின்னர் அவர் விழாவில் பங்கேற்று நர்சிங் கல்லூரியை திறந்து வைத்து பேசுகிறார். அதன் பின்னர் இரவு கார் மூலம் கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். துணை ஜனாதிபதி கோவை வருவதை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. போலீஸ் கமிஷனர் கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் டிரோன் பறக்க தடை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை வருவதை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 11 மணி வரை உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவினாசி ரோடு, லட்சுமி மில் சந்திப்பு, ஜி.கே.என்.எம். மருத்துவமனை, ஹோப்ஸ், கொடிசியா, பீளமேடு, சித்ரா, நேரு நகர், காளப்பட்டி, சின்னியம்பாளையம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsksammendrag for rask lesing. For hele saken, mer kontekst og oppdateringer, gå til den opprinnelige utgiveren.
Les full artikkel
https://www.dailythanthi.com/news/tamilnadu/vice-president-cp-radhakrishnan-to-visit-coimbatore-tomorrow




